×

ஒரு வழியாக ரிலீஸ்க்கு தயாரான தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரீலிசாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரீலிசாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா
 

தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரீலிசாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரீலிசாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளி விட்டு ஒருவழியாகக் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. 

இதில் இயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்து கொண்டு இருக்கும் நிலைமை ஆகியுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படம் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.