×

ஒரு வழியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிறது! 

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. பின்பு சென்சார்
 

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. 

பின்பு சென்சார் போர்டு இந்த படத்திற்கு UA சான்றிதழ் கொடுத்தது. படத்தின் அனைத்து வேலைகள் முடிந்த பிறகும் ஏன் இன்னும் படம் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இந்த படத்தின் பாடல்களும் ஹிட் அடித்ததால் சீக்கிரமாகப் படத்தை ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

ஆனால் படத்தில் பல சிக்கல்கள் இருந்ததால் கவுதம் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த அடுத்த படங்களில் கவனத்தைச் செலுத்தக் கிளப்பி விட்டார். இந்த நிலையில் தற்போது பிரச்சனை அனைத்தும் முடிவுயடைந்ததால் படத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் இந்த முறையாவது படத்தை ரிலீஸ் பண்ணுங்க பாஸ்… என்று கூறி வருகின்றனர்.