×

“ஒரு வழியாக அஜய் – விஜய் நட்பின் கதை பிரச்னை இறுதியில் சுபமாக முடிந்தது”.. எழுத்தாளர் அஜயன் பாலா பதிவு!

எழுத்தாளரும், திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின் திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள அஜயன் பாலா சமீபத்தில் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார். எழுத்தாளரும், திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின் திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள அஜயன் பாலா சமீபத்தில் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார்.இதுதவிர சென்னையில் ஒரு நாள், மனிதன், தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர்
 

எழுத்தாளரும்,  திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின்  திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள  அஜயன் பாலா  சமீபத்தில்  ‘தமிழ்  சினிமா  வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார்.

எழுத்தாளரும்,  திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின்  திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள  அஜயன் பாலா  சமீபத்தில்  ‘தமிழ்  சினிமா  வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார்.இதுதவிர சென்னையில் ஒரு நாள், மனிதன், தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வேட்டை, தேவி, வனமகன் ஆகிய படங்களின் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.

அதேபோல் ஏ.எல். விஜய் இயக்கி வரும் ஜெயலலிதா பயோபிக்காக தலைவி படத்தில் கதை விவாதத்தில் பங்கெடுத்துள்ளார். இருப்பினும் கடந்த 24 ஆம் தேதி வெளியான தலைவி செகண்ட் லுக் போஸ்டரில் அஜயன் பாலா பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து அஜயன் பாலா அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஏ.எல் விஜய் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், 6 மாதமாகத் தான் எழுதிய கதையை வழக்குக்குப் பயன்படுத்தி வெற்றி பெற்ற பிறகு தன் பெயரை நீக்கி விட்டதாகவும் விஜய் தன் முதுகில் குத்திவிட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும்,  திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கச் சொன்னது தான் அவமானப் படுத்தப்பட்டதற்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரங்களில் அந்த பதிவை அஜயன் பாலா பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார். 

 

அதன் பின்னர், தலைவி படத்தின் தயாரிப்பாளர் அதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், நேரில் அழைத்து அதற்கு விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் மற்றொரு பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எழுத்தாளர் விஜயன் பாலா அவரது பேஸ்புக்கில்,” ஒரு வழியாக அஜய் – விஜய் நட்பின் கதை ப்ரச்னை இறுதியில் சுபமாக முடிந்தது. என்னதான் நட்பாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு தான் எனும் முது மொழிக்கொப்ப சரியான தகுதி அட்டையுடன் புதிய ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகியது. எருமை மாட்டில் ஏதோ பெய்கிறது நமக்கென்ன என இல்லாமல் எட்டிப்பார்த்து விருப்பக்குறியிட்டு வருத்த மொழி பேசிய பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் எழுத்தாளர் அஜயன் பாலாவும் 10 ஆண்டுக்கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

allowfullscreen