×

ஒய் திஸ் கொலவெறி’ பாடல் காப்புரிமை வழக்கில் சோனிக்கு பின்னடைவு !

நடிகர் தனுஷ் நடித்து, 2012-ல் வெளியான ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல், உலக அளவில் பிரபலம் ஆனது. இந்தப் பாடலின் தமிழ், தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனனத்துக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தொடர்பான வழக்கில்
 
நடிகர் தனுஷ் நடித்து, 2012-ல் வெளியான ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல், உலக அளவில் பிரபலம் ஆனது. இந்தப் பாடலின் தமிழ், தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனனத்துக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தொடர்பான வழக்கில் சோனி நிறுவனத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து, 2012-ல் வெளியான ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல், உலக அளவில் பிரபலம் ஆனது. இந்தப் பாடலின் தமிழ், தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனனத்துக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் படக்குழுவுவின் மனுவுக்கு பதில்தருமாறு சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சோனி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
சோனி மியூசிக் நிறுவன மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சோனி மியூசிக் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து, சோனி நிறுவன அதிகாரிகளுக்கு விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார். 2013 முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கை, 3 மாதங்களில் விசாரித்து முடிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.