×

ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி!

எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களைப் போற்றும் வகையில் அந்த அருங்காட்சியகம் இருக்க வேண்டும். சென்னை: சென்னையில் இசை அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கடந்த மாதம் 10ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கர்நாடகாவில் இசை கலைஞர்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகம் உள்ளது. அதே போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகத்தை
 

எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களைப் போற்றும் வகையில் அந்த அருங்காட்சியகம் இருக்க வேண்டும்.

சென்னை: சென்னையில் இசை அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்  ஏஆர் ரகுமான் கடந்த மாதம் 10ம் தேதி  சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கர்நாடகாவில்  இசை கலைஞர்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகம் உள்ளது. அதே போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களைப் போற்றும் வகையில் அந்த அருங்காட்சியகம் இருக்க வேண்டும். அந்த எண்ணம் எனக்குள் உள்ளது. இந்த திட்டத்திற்குத் தமிழக அரசு உதவ வேண்டும்’ என்றார். 

இந்நிலையில் இது குறித்து  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ‘இசை அருங்காட்சியகம் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமானிடம் ஆக்கப்பூர்வமான திட்டமும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் தமிழக அரசு உதவத் தயார்’என்று கூறியுள்ளார்.