×

எழுத்தாளர் சங்க தலைவர் பதவி ராஜினாமா ஏன்?: கே.பாக்யராஜ் விளக்கம்!

தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சென்னை: தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கே.பாக்யராஜ் செயல்பட்ட நிலையில், எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். போட்டியின்று ஒருமனதாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாக்யராஜ், 6 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனது ராஜினாமா
 

தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார்.

சென்னை: தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார்.

சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கே.பாக்யராஜ் செயல்பட்ட நிலையில், எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். போட்டியின்று ஒருமனதாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாக்யராஜ், 6 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், தனது ராஜினாமா குறித்து செய்தியளர்களிடம் பேசிய கே.பாக்யராஜ், எழுத்தாளர் சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த அணியாக செயல்படவில்லை. முக்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சர்கார் பட விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், அதில் பல சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் முக்கியமாக தேர்தல் வைத்து முறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதது தான் காரணம் என கருதுகிறேன்.

சங்கத்தில் சில தவறான நடவடிக்கைகள் நடப்பதாக என் கவனத்திற்கு வந்தது. நிறைய விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. சங்கத்தின் பெயரையும், உறுப்பினர்களின் நலனையும் காப்பற்றுவதை எழுத்தாளனாக எனது கடமையாக கருதுகிறேன். என்னை போலவே சங்கத்தில் நேரிடையாக நியமனம் செய்யப்பட்ட அனைவரும் பதவி விலக வேண்டும். ஆனால் மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு இல்லை. 

சங்கம் இருக்க நிலையில் தேர்தல் நடத்துவது வீண் செலவு என சிலர் கருதலாம், சங்கமே வீணாபோவதை தடுக்க செலவு வீணானா தப்பில்லை. எனது அபிப்ராயத்தை ஏற்பவர்கள் ராஜினாமா செய்யலாம். அதை என்னவென்று கவனித்துவிட்டு தேர்தலை நடத்தினால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவோடு தலைவர் பொறுப்பை ஏற்று தொடர்ந்து கடமையோட செயல்பட தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும், சங்கத்தின் நலன் கருதி ஒழுங்கினங்கள் குறித்து குறிப்பிட மறுத்த கே.பாக்யராஜ், முருகதாஸிடம் கெஞ்சி கேட்டும் அவர் உடன்படாததால் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படமான ‘சர்கார்’ பட கதையை சொல்ல வேண்டிய சூழலுக்கு ஆளானேன். இருந்தாலும் அது தவறு என்பதால் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த ராஜினாமா தொடர்பாக கருத்துக் கூற 2 நாட்கள் அவகாசம் தேவை எனவும் கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.