×

எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்!

எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு `விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி: எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு `விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட போதும், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவின் போதும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் வங்கிக்
 

எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு `விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு `விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின்  ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட போதும், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவின் போதும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் முன்னதாகவே கஜா புயல் பாதிப்பின் போது பல்வேறு நிவாரண உதவிகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஒருவர் எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்படுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்குச் சென்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரூ.25,000 சிகிச்சைக்காக வழங்கியுள்ளனர்.

 

இதனால் மகிழ்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.