×

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வெற்றியளித்த கலைஞர்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இன்று வரையில் ரசிகர்கள் திரையுலகில் விடிவெள்ளியாய் திகழும் இவர்கள் இருவரையும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரது திரைப்பயணத்திலும் முதல் வெற்றியை இவர்களுக்கு தந்தது கருணாநிதியின் எழுத்துத் தான். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இன்று வரையில் ரசிகர்கள் திரையுலகில் விடிவெள்ளியாய் திகழும் இவர்கள் இருவரையும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரது திரைப்பயணத்திலும் முதல் வெற்றியை இவர்களுக்கு தந்தது
 

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் என்று இன்று வரையில் ரசிகர்கள் திரையுலகில் விடிவெள்ளியாய் திகழும் இவர்கள் இருவரையும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரது திரைப்பயணத்திலும் முதல் வெற்றியை இவர்களுக்கு தந்தது கருணாநிதியின் எழுத்துத் தான்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் என்று இன்று வரையில் ரசிகர்கள் திரையுலகில் விடிவெள்ளியாய் திகழும் இவர்கள் இருவரையும் போற்றிப் புகழ்கிறார்கள்.

ஆனால், இவர்கள் இருவரது திரைப்பயணத்திலும் முதல் வெற்றியை இவர்களுக்கு தந்தது கருணாநிதியின் எழுத்துத் தான். எம்.ஜி ஆருக்கு ‘மந்திரி குமாரி’,சிவாஜிக்கு ‘பராசக்தி’ என இரண்டு படங்களுமே கருணாநிதி வசனம் எழுதிய படங்கள் தான். கலைஞரின் வசனத்தில் அந்நாட்களில் வெளிவந்த இந்த இரண்டு படங்களுமே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பரவலான ரசிகர்கள் வட்டாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. கலைஞர் வசனம் எழுதிய முதல் படம் 1947ல் வெளிவந்த ‘ராஜகுமாரி’.

‘ராஜகுமாரி’யில் ஆரம்பித்த திரையுலகப் பயணம்  2011ல் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரையில்  64 வருடங்களாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். இவற்றுக்கிடையில் கலைஞர் தினமும் முரசொலி நாளேட்டில் எழுதிய கடிதங்களுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. கலைஞர்  எழுதிய முதல் நாடகம் ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீசில் 1944ல் மேடையேற்றப்பட்ட ‘பழனியப்பன்’ நாடகத்தைத் தொடர்ந்து  மொத்தம் 21 நாடகங்கள் எழுதியுள்ளார்.