×

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மொமெண்ட்: ‘ஜோடி’ நாயகனுக்கு வந்த சோதனை; ரசிகர்கள் வேதனை!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த், தற்போது தெலுங்கு படத்தில் சைடு கேரக்டரில் நடிப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த், தற்போது தெலுங்கு படத்தில் சைடு கேரக்டரில் நடிப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இரட்டை வேடம் போட்டு ரொமேன்ஸ்
 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த், தற்போது தெலுங்கு படத்தில் சைடு கேரக்டரில் நடிப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த், தற்போது தெலுங்கு படத்தில் சைடு கேரக்டரில் நடிப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இரட்டை வேடம் போட்டு ரொமேன்ஸ் செய்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித்திற்கு இணையாக அவர்களது காலக்கட்டத்தில் லவ்வர் பாயாக ரசிகைகளை கவர்ந்த பிரசாந்த், அவரது திருமணத்திற்கு பின் திரையுலகில் அவரால் முன்னணி ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்தும், படு தோல்வி திரைப்படங்களால் கடும் சரிவை கண்டார். தற்போது திடீரென தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள ‘வினய விதய ராமா’ படத்தில் ஹீரோவுக்கு பின்னால் சைடு கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் ரிலீசாகி பிரசாந்த் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கும்பலோடு கோவிந்தாவாக ஹீரோவுக்கு பின்னால் வரும் 4 பேரில் ஒருவராய் பிரசாந்த் நடித்துள்ளார். இப்படி நடிப்பதற்கு விஜய், அஜித் திரைப்படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கலாம் என ட்விட்டரில் அவரது ரசிகர்களே சிலர் ஐடியா கொடுத்து வருகின்றனர்.