×

என்னது தலைவர் 168 படத்தில் குஷ்புவுக்கு இப்படி ஒரு ரோலா?

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாக
 

 இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

 இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது குஷ்பு வேடம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குஷ்பு ரஜினியின் 168 படத்தில் வில்லியாக நடிக்க இருக்கிறாராம்.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.