×

என்னது… உலக அளவில் ட்ரெண்டான நேசமணி பெயரில் ஒரு படம் உருவாகிறதா? 

உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஃபிரெண்ட்ஸ்’. இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடத்துத்திருந்தார். அதில் ஒரு காமெடி காட்சியில், தேவையில்லாத ஆணியை பிடுங்க மாடிக்கு சென்ற
 

உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் படம் எடுப்பதற்கு  தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை: உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் படம் எடுப்பதற்கு  தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில்  கடந்த 2001ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஃபிரெண்ட்ஸ்’. இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடத்துத்திருந்தார். அதில் ஒரு காமெடி காட்சியில், தேவையில்லாத ஆணியை பிடுங்க மாடிக்கு சென்ற ரமேஷ் கண்ணா, கையிலிருந்த சுத்தியலை தவற விட, அது கீழே நின்றுக் கொண்டிருந்த வடிவேலுவின் தலையில் விழுந்து அவர் மயங்கிவிடுவார். அந்த சீன் இன்று வரை அன்னைவரைக்கும் பிடித்தமான ஒன்று. 

இந்த நிலையில் இந்த காமெடி சீனை வைத்து இளைஞர் ஒருவர், கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்து அவர் உயிருக்குப் போராடி வருகிறார் என்ற நகைச்சுவையான பதிவு செய்தது நேசமணி நேற்று முழுக்க  ட்ரெண்டாக காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய நெட்டிசன்கள், உலகளவில் ட்ரெண்ட செய்தனர். 

இந்த நிலையில் தற்போது உலக முழுக்க ‘கான்ட்ராக்டர் நேசமணி’  ட்ரெண்டான நிலையில் அதை படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி தயாரிப்பாளர் ஒருவர் ‘கான்ட்ராக்டர் நேசமணி’  என்ற தலைப்பினை  தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதை விண்ணப்பித்தது யார்? என்ற தகவலைத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிடவில்லை.மேலும் படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.