×

என்னது அவெஞ்சர்ஸ் பட நடிகருக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிகப் பிரபலமானவை ‘அயன் மேன்’ திரைப்படங்கள். ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிகப் பிரபலமானவை ‘அயன் மேன்’ திரைப்படங்கள். இதுவரை 3 பாகங்கள் வெளி வந்துள்ளன. அத்துடன் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் ‘அயன் மேன்’ கதாபாத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கும். அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ‘அயன் மேன்’ படத்தின்
 

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிகப் பிரபலமானவை ‘அயன் மேன்’ திரைப்படங்கள்.

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிகப் பிரபலமானவை ‘அயன் மேன்’ திரைப்படங்கள். இதுவரை 3 பாகங்கள் வெளி வந்துள்ளன. அத்துடன் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் ‘அயன் மேன்’ கதாபாத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ‘அயன் மேன்’ படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தனது சம்பளத்தை 10 மில்லியன் டாலராக உயர்த்தியுள்ளாராம். 

அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டாலர் (ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம்) சம்பளம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவின் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம்  7 நாட்களில் ரூ.9,000 கோடி வசூல் செய்ததிருப்பது குறிப்பிடத்தக்கது.