×

’என்.ஜி.கே’ அப்டேட்: முரட்டு அன்பான ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட் காத்திருக்கு..!

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் குறித்த சூசகமான தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார். சென்னை: சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் குறித்த சூசகமான தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது. இதன் காரணமாக தீபாவளி ரிலீசில் இருந்து விலகிய ‘என்.ஜி.கே’, படத்தின் இறுதிக்கட்ட
 

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் குறித்த சூசகமான தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார்.

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் குறித்த சூசகமான தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது.

இதன் காரணமாக தீபாவளி ரிலீசில் இருந்து விலகிய ‘என்.ஜி.கே’, படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’என்.ஜி.கே’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு, படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஒரு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் அட்டகாசமாக உள்ளதாகவும், விரைவில் முரட்டு அன்பான ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கிறது என்ற வகையிலும் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.