×

எனக்கு பார்வை வரப்போகுது: பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி நெகிழ்ச்சி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, விரைவில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக தெரிவித்துள்ளார். கேரளா: கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, விரைவில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக தெரிவித்துள்ளார். பார்வையற்ற பின்னணி பாடகியான வைக்கம் விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று பின் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு திருமண
 

கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, விரைவில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

கேரளா: கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, விரைவில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற பின்னணி பாடகியான வைக்கம் விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று பின் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இந்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதில் வைக்கம் விஜயலக்ஷ்மியாக, கேரளாவில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹெனன் நடிக்கிறார்.

இந்நிலையில், வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு விரைவில் பார்வை கிடைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய வைக்கம் விஜயலக்ஷ்மி, சிறுவயதில் இருந்து பார்வை கிடைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன்.

இதற்காக அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். நவீன டெக்னாலஜி மூலம் அளிக்கப்படும் இந்த சிகிச்சை வழியே விரைவில் எனக்கு பார்வை கிடைக்க உள்ளது. வெளிச்சத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்