×

‘எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா உன்ன மாதிரி…’ காதலர் குறித்து பிரபல நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்
 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

 

மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர்  கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை பிரியா பாவானி ஷங்கர் தனது காதலர் ராகவேல் ராஜாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரின் பதிவில், ‘நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட அவரது  ரசிகர்கள்  அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.