×

உலகளவில் ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர் ஏ.ஆர்.ரகுமான்!

உலகளவில் 2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெற்றுள்ளது. சென்னை: உலகளவில் 2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெற்றுள்ளது. உலகளவில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிகுந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரது பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. சமூக ஊடக ஆய்வு நிறுவனமான ப்ராண்ட் வாச் என்ற
 

உலகளவில் 2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெற்றுள்ளது.

சென்னை: உலகளவில் 2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெற்றுள்ளது.

உலகளவில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிகுந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரது பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சமூக ஊடக ஆய்வு நிறுவனமான ப்ராண்ட் வாச் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 2018ம் ஆண்டு உலகளவில் ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்த 10 ஆண்கள், மற்றும் 10 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதலிடத்தையும், 2வது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்திலும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 4வது இடத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர்.

10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில் 8வது இடத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், 10வது இடத்தை ஏ.ஆர்.ரகுமானும் பிடித்துள்ளனர்.இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தி பகிர்ந்துள்ளார். இந்த ஆய்வு முடிவு ஏ.ஆர்.ரகுமனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி 2வது இடத்திலும், டிவி நடிகை கிம் கர்தாஷியன் 3வது இடத்திலும் உள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.