×

உற்சாகமாக திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்: வைரல் புகைப்படம்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அமெரிக்கா: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் விஜயகாந்த் இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்குச்
 

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அமெரிக்கா: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் விஜயகாந்த் இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். 

இந்நிலையில் விஜயகாந்த் தன்னுடைய 29-ம் ஆண்டு திருமண விழாவையொட்டி அவர் குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக குடியரசு தினத்தன்று வாழ்த்து கூறி விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

உடல்நலக்குறைவால்  குரல்வளம் பாதிக்கப்பட்டுப் பேச முடியாத நிலைக்கு ஆளான விஜயகாந்த்தின் உடல்நலம் தற்போது முன்னேற்றமடைந்துள்ளதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.