×

‘உன் இதயம் – இசை இரண்டுக்கும் வயது பதினாறு தான்’ :இசைப்புயலின் பிறந்தநாள் இன்று!

மண்வாசனை மாறாத கிராமத்துப் பாடல்களும் தனக்கு கைதேர்ந்தது என்பதை கிழக்கு சீமையிலே படத்தில் நிரூபித்து காட்டினார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் 53 வது பிறந்தநாள் இன்று… தந்தையின் மறைவு, குடும்பத்தில் கொடிய வறுமை, அடிக்கடி வந்து சென்ற தற்கொலை எண்ணம் என வாழ்வில் பல இக்கட்டான சூழல்களைச் சந்தித்த அசாத்திய மனிதன். தந்தை இறந்த பிறகு அவரின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து வந்த பணத்தை வைத்து இசை கற்க தொடங்கிய அவர், இளையராஜா, எம்எஸ்வி, ரமேஷ்
 

மண்வாசனை மாறாத கிராமத்துப் பாடல்களும் தனக்கு கைதேர்ந்தது என்பதை கிழக்கு சீமையிலே  படத்தில் நிரூபித்து காட்டினார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் 53 வது  பிறந்தநாள் இன்று… தந்தையின் மறைவு, குடும்பத்தில் கொடிய வறுமை, அடிக்கடி வந்து சென்ற தற்கொலை எண்ணம் என வாழ்வில் பல இக்கட்டான சூழல்களைச் சந்தித்த அசாத்திய மனிதன். 

தந்தை இறந்த பிறகு அவரின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து வந்த பணத்தை வைத்து இசை  கற்க தொடங்கிய அவர், இளையராஜா, எம்எஸ்வி, ரமேஷ் நாயுடு, குன்னக்குடி வைத்தியநாதன் என பலரிடம் பணிபுரிந்ததுடன், கிளாசிக்கல் பயின்று அதில் பட்டமும் பெற்றார்.

இளையராஜாவின் இசை பட்டிதொட்டி எங்கும் ஒலித்து  கொண்டிருந்த காலகட்டம் அது. இளையராஜாவை தவிர எந்த இசையமைப்பாளரும் திரையுலகில் இல்லை என்ற சமயத்தில் கவிதாலயா உடன் இளையராஜாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில்  ரோஜா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.  முதல் படத்திலேயே தேசிய விருத்தி வாங்கிய அந்த மனிதனின்  இசைப் பயணம், நாடு, கண்டம். மொழி என அனைத்தையும் கடந்து இன்னும் பயணித்து கொண்டிருக்கிறது.

ஜென்டில்மேன், புதிய முகம், உழவன், திருடா திருடா, டூயட், காதலன் என அடுத்தடுத்து வெற்றி பாடல்களை  கொடுத்து அசத்திய இவர், மண்வாசனை மாறாத கிராமத்துப் பாடல்களும் தனக்கு கைதேர்ந்தது என்பதை கிழக்கு சீமையிலே  படத்தில் நிரூபித்து காட்டினார்.

கோல்டன் குளோப்  மற்றும் கிராமி விருதுகளை  பெற்று அசத்திய  ரகுமான், 2009-ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக  இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். திரையுலகில் கால்தடம் பதித்து 27 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுவரை ரகுமானுக்கும்  சரி, அவரின் இசைக்கும் சரி என்றும் பதினாறு  தான்…