“உங்க ‘மாஃபியா’ நல்லா இல்ல’ : நெட்டிசன் கேள்விக்கு அசத்தல் பதிலளித்த நடிகர் பிரசன்னா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை டிவிட்டரில் டேக் செய்த நெட்டிசன் ஒருவர், மாஃபியா படம் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.அதற்கு பதிலளித்த பிரசன்னா, ஒரு படம் என்றால் அது சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. உங்கள் இந்த படம் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன் கேள்விக்கு கோபப்படாமல் பொறுமையாகப் பதிலளித்த பிரசன்னாவை பலரு ம் பாராட்டி வருகிறார்கள்.