×

இவர்கள் கிருஷ்ணரும் அர்ஜுனனும் இல்லை… சகுனி – துரியோதனன்! – சித்தார்த்தின் படுபயங்கர ட்வீட்!

பிரதமர் மோடி, அமித் ஷாவை துரியோதனன், சகுனி என்று நடிகர் மிகக் கட்டமாக ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த போலீசார் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்தனர். பிரதமர் மோடி, அமித் ஷாவை துரியோதனன், சகுனி என்று நடிகர் மிகக் கட்டமாக ட்வீட் செய்திருப்பது பரபரப்பை
 

பிரதமர் மோடி, அமித் ஷாவை துரியோதனன், சகுனி என்று நடிகர் மிகக் கட்டமாக ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த போலீசார் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்தனர்.

பிரதமர் மோடி, அமித் ஷாவை துரியோதனன், சகுனி என்று நடிகர் மிகக் கட்டமாக ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த போலீசார் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்தனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்தநிலையில், நடிகர் சித்தார்த் ஓர் ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், இவர்கள் கிருஷ்ணரோ, அர்ஜுனனோ இல்லை… இவர்கள் சகுனியும் துரியோதனனும். பல்கலைக் கழகத்தை தாக்குவதை நிறுத்துங்கள், மாணவர்களை தாக்குவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த ட்வீட்டில் நேரடியாக அமித்ஷா, மோடி பெயரை நடிகர் சித்தார்த் குறிப்பிடவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனன் என்று ரஜினி பாராட்டியிருந்தார். இதனால், சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.