×

இளைஞர்களின் கனவுக்கன்னி மியா காலிஃபாவிற்கு விரைவில் டும் டும் டும்!

உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் மியா காலிஃபாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சென்னை: உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் மியா காலிஃபாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா காலிஃபா. லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக வளம் வருகிறார். சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை
 

உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் மியா காலிஃபாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை: உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் மியா காலிஃபாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா காலிஃபா. லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக வளம் வருகிறார். 

சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர், விரைவில் சினிமாவிலும் நடிக்க போவதாக சில செய்திகள் வெளியாகின. 

மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய  Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதை இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டு வருகின்றனர். இதில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது 26 வயதாகும் நிலையில் நடிகை  மியா காலிஃபாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. தன்னுடன் நடித்த சக நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அதிகாரபூர்வமாக மியா கலிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதனால் திருமணத்திற்குப் பின்னர் மியா படங்களில் நடிக்க மாட்டாரா என்று மியாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கின்றனர்.