×

இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற அசுரன்! அறிவிக்கப்பட்டது விகடன் விருதுகள்… 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படைப்புகள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடன் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படைப்புகள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடன் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் 33 விருதுகளுக்கு மொத்தம் 150 படங்கள் மற்றும் நடிகர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் தேர்வானவர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதன்படி பஞ்சமி நிலப்பிரச்னையை
 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படைப்புகள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடன் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படைப்புகள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடன் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் 33 விருதுகளுக்கு மொத்தம் 150 படங்கள் மற்றும் நடிகர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் தேர்வானவர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். 

இதன்படி பஞ்சமி நிலப்பிரச்னையை சாமானியனின் பார்வைக்கு அசுரன் படத்தின் மூலம் கொண்டு சென்ற படைப்பாளியான இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. 

இதேபோல் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுகத்தினர் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளை துணிவோடு ஏற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்க்கு சிறந்த நடிகர் என்ற கவுரவம் வழங்கப்பட்டது. 

சிறந்த நடிகைக்கான விருது கேம் ஓவர் படத்தில் நடித்ததற்காக நடிகை டாப்ஸி பன்னுக்கு அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பாக சென்ற அந்த படத்தின் வெற்றிக்கு டாப்ஸியின் பங்கு அலப்பறியது.  

`பேரன்பு’, `சூப்பர் டீலக்ஸ்’ என ஆகிய இரு படங்களிலும் துள்ளலான இசையை கொடுத்து திரை அரங்கை அதிரவைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. 

மிரட்டல் தொனி, அதிரவைக்கும் பார்வையுடன் சாம்பியன் படத்தில் ஜொலித்த ஸ்டன் சிவாவுக்கு சிறந்த வில்லனுக்கான ஆனந்த விகடன் விருது வழங்கப்படுகிறது. 


இருட்டு படத்தில் வசனங்களின்றி, பார்வையிலேயே மிரள வைத்த சாய் தன்ஷிகாவுக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. 

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கைதி படத்தில் நடித்ததற்காக ஜார்ஜ் மரியானுக்கு அறிவிக்கப்பட்டது. 

இதேபோல் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக ரம்யா கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.