×

இயக்குநர் சங்கத் தேர்தலில் பாரதிராஜாவை எதிர்த்து இவரா போட்டியிடுகிறார்?…

இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கங்கள் அளவுக்கு பெரும் புகைச்சல்கள் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டு வந்த இயக்குநர் சங்கத்தில் இம்முறை ஒரு பெரும் பூகம்பமே வர வாய்ப்பிருப்பதாக அச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜா, சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல்
 

இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கங்கள் அளவுக்கு பெரும் புகைச்சல்கள் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டு வந்த இயக்குநர் சங்கத்தில் இம்முறை ஒரு பெரும் பூகம்பமே வர வாய்ப்பிருப்பதாக அச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜா, சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது இயக்குநர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இயக்குநர்கள் சங்கத் தலைவராக யார் போட்டியிடுவார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா பதவி விலகும் போது,‘தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார். 

ஆனால் அவரது தேர்வை விரும்பாத சில இயக்குநர்கள் அவரது மனம் நோகும்படி வெளிப்படையாக கமெண்ட் அடித்ததாலேயே கோபப்பட்டு அவர் ராஜினாமா செய்தது ஊரறிந்த உண்மை. இப்படி அவமானப்படுத்தப்பட்டதால் பாரதிராஜா கண்டிப்பாக மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அதே போல் அவரை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை கோதாவில் இறக்கும் முயற்சியில் பாரதிராஜாவின் எதிர் அணியினர் இறங்கியுள்ளனர்.