×

இயக்குநராக அவதாரம் எடுத்த நடிகை ராதிகா ஆப்தே

விவகாரமான குறும்படங்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ’தோனி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’வெற்றி செல்வன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.’கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விவகாரமான குறும்படங்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. அரைகுறை உடையிலும்
 

விவகாரமான குறும்படங்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை  ராதிகா ஆப்தே தற்போது இயக்குநராக  அவதாரம் எடுத்துள்ளார். 

தமிழில் ’தோனி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’வெற்றி செல்வன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.’கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார்.

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விவகாரமான குறும்படங்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.

இந்நிலையில் ராதிகா ஆப்தே  ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற  படத்தை இயக்கியுள்ளார். அரை மணி நேர படமான இதை  ஹனி ட்ரேஹன், அபிஷேக் சவுபே ஆகியோர் தயாரித்துள்ளனர்.  குல்ஷன் தேவைய்யா, சஹானா கோஸ்வாமி உட்பட சிலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

இதுகுறித்து கூறும் தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன், இது வழக்கமான கதையாக இருக்காது. சமூகத்தைக் கேள்வி கேட்கும் படமாக அமைந்துள்ளது. இதன் மூலம்  ராதிகா ஆப்தே தனது மற்றொரு பரிமாணத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.