×

இயக்குநராக அறிமுகமாகவுள்ள பிரபல நடன இயக்குநர்!

தமிழில் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. பிரபல நடன இயக்குநரான பிருந்தா தற்போது இயக்குநராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். பிரபல நடன இயக்குநர்களில் ஒருவரும், கலா மாஸ்டரின் சகோதரியுமானவர் பிருந்தா. கடின உழைப்பு சொந்த காரரான இவர் நந்தவன தேரு படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களை நடனத்தின் மூலம் ஆட்டுவித்த பெருமை பிருந்தாவை சேரும்.
 

தமிழில் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத்  தெரிகிறது.

பிரபல நடன இயக்குநரான பிருந்தா தற்போது இயக்குநராக  புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். 

பிரபல நடன இயக்குநர்களில்  ஒருவரும், கலா மாஸ்டரின் சகோதரியுமானவர் பிருந்தா. கடின உழைப்பு சொந்த காரரான இவர் நந்தவன தேரு படத்தில் நடன இயக்குநராக  அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களை நடனத்தின் மூலம் ஆட்டுவித்த பெருமை பிருந்தாவை சேரும்.  

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பிருந்தா தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.  தமிழில் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத்  தெரிகிறது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள், வரும் 2020 பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகக் கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.