இமாச்சலில் ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பு: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா பங்கேற்பு!
அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பலர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் திரைப்படம் ‘பிரம்மாஸ்த்ரா’. இதில் ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஹிரோ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பலர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பு தற்போது படக்குழு இமாச்சலப்பிரதேச மாநிலம் மாணலியில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அங்கு ரன்பீர் மற்றும் அலியாவின் நடனம் ஆடும் பாடல் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார்.
மூன்று பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தைக் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.