×

‘இந்தியன் 2’ ஷூட்டிங் எப்போ தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட செட் அருகே இயக்குநர் ஷங்கர்
 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட செட் அருகே இயக்குநர் ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனிடையே, திடீரென ‘இந்தியன் 2’ திரைப்படம் டிராப் ஆனதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஜன.18ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். மேலும், கவுரவ வேடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அதில் நடிக்கத் தயார் என சிம்பு பெருந்தன்மையுடன் கூறியதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.