×

இந்தியன் 2 விபத்து: நடிகர் கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு!

இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்தியன் -2 படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 

இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்தியன் -2 படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கமாக சினிமாக்களில் 40 அடி உயரத்திற்குப் பயன்படுத்தக் கூடிய கிரேன்களையே  பயன்படுத்தி வந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக 200 அடி உயரம் வரை உபயோகிக்க கூடிய கிரேனை பயன்படுத்தியுள்ளனர். 

 

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர்  கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களை விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். 

 

முன்னதாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்   நசரத்பேட்டை போலீசார்  கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீதும்  அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களைத் தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.