×

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி !

கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்ததில், கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள்
 

கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் உள்ள  ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்ததில், கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இதில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் காரணமாக கிரேன் ஆபரேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களது மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.