×

இந்த தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை…நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன்
 

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து   தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில்  பிகைன்ட்வோட்ஸ் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இவரிடம், மூன்று நிற ரோஜாக்களைக் கொடுத்து,  இந்த மூன்றும்  நட்பு, காதல், திருமணத்தை குறிக்கிறது. இதனை யாருக்கு வழங்குவீர்கள் என்று கேட்டனர். 

அதற்கு ராஷ்மிகா நட்பை குறிக்கும் ரோஜா  விஜய் தேவரகொண்டாவவுக்கு வழங்குவேன்,  காதலை குறிக்கும் ரோஜா விஜய் சேதுபதிக்கு தருவேன் என்றார். அப்போது திருமணத்தைக் குறிக்கும் ரோஜா யாருக்கு கொடுப்பார் என்று நினைத்த நிலையில் கொஞ்சமும் யோசிக்காமல் அதை நடிகர் விஜய்க்கு தருவேன் என்று கூறினார்.