×

“இதனால தான் அவங்க லேடி சூப்பர்ஸ்டார்”! நயன்தாரா  பற்றி ரகசியம் வெளியிட்ட நடிகை!

தன்னுடைய நடிப்பாலும் கடின உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் என்றும் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவருக்காக மட்டுமே படம் பார்க்க வரும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். சமீபத்தில் வெளியான தர்பார், பிகில் போன்ற படங்களில் நடித்த பிறகு தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தில் ஸ்ம்ரிதி வெங்கட் என்ற நடிகை படத்தில் நயன்தாரா உடன் நடித்தது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய நடிப்பாலும் கடின உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் என்றும்
 

தன்னுடைய நடிப்பாலும் கடின உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் என்றும் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவருக்காக மட்டுமே படம் பார்க்க வரும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். சமீபத்தில் வெளியான தர்பார், பிகில் போன்ற படங்களில் நடித்த பிறகு தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மூக்குத்தி  அம்மன் படத்தில் ஸ்ம்ரிதி வெங்கட் என்ற நடிகை படத்தில் நயன்தாரா உடன் நடித்தது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய நடிப்பாலும் கடின உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் என்றும் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவருக்காக மட்டுமே படம் பார்க்க வரும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். சமீபத்தில் வெளியான தர்பார், பிகில் போன்ற படங்களில் நடித்த பிறகு தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

 

தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஸ்ம்ரிதி வெங்கட் இந்த படத்தில் நயன்தாராவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். “நயன்தாரா ஒரு பெர்பெக்சனிஸ்ட்(Perfectionist). ஷூட்டிங்-க்கு எப்போவுமே லேட்டா வரமாட்டாங்க, சீன் சேஞ்சுல கூட ரொம்ப வேகமா இருப்பாங்க, கேமரா முன்னாடி வந்துட்டா தன்னோட பொசிஷன் என்னனு துல்லியமா தெரிஞ்சு வச்சிருப்பாங்க, அவங்கள மாதிரி வேகமா இருக்குற ஒருத்தர கண்டுபிடிக்கிறது கஷ்டம், அவங்கள பார்த்து நாங்க கத்துகிறோம்” என்று கூறினார்.

மூக்குத்தி அம்மன் குழுவுடன் பணியாற்றியது பற்றி பேசிய போது, “நான் வேலை செய்ததிலேயே இதுதான் பெஸ்ட் டீம். இந்த படம் நீங்கள் கற்பனை செய்வது போல அம்மன் படமாக இருக்காது. நல்லவர்களுக்கும் கெட்டவங்களுக்கும் நடக்குற சண்டை இல்ல. இது ஒரு காமெடியான படம். இந்த படத்தில் நயன்தாராவை அம்மனாகப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என நம்புகிறேன்” என்றார்.

மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்குகிறார்கள், ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.