×

இணையதளத்தில் வெளியான சர்கார் : படக்குழுவினர் அதிர்ச்சி!

சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை: சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பைரசியை தடுக்க சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சர்கார் படத்தை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்போவதாகத் தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது
 

சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பைரசியை தடுக்க சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சர்கார் படத்தை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்போவதாகத் தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான ட்வீட்டில், ‘சர்கார்’ படத்தின் ஹெச்டி பிரிண்ட் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தது.

இதனால் தமிழ் ராக்கர்ஸ்க்கு பயந்து தயாரிப்பாளர் சங்கமும் அனைத்துத் திரையரங்குகளிலும் கேமரா பொருத்த திட்டமிட்டிருந்தது.இந்நிலையில் , சர்கார் வெளியாகும் திரையரங்குகளில் எவரேனும் கேமிராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா எனக் கண்காணிக்க ஆட்களை நியமிக்க வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.