×

இசைஞானி இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பே அக்காகுருவி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் இயக்குநர் சாமி இயக்கும் திரைப்படம் அக்காகுருவி. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பே அக்காகுருவி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இதிலுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்று
 

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பே அக்காகுருவி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்

இயக்குநர்  சாமி இயக்கும் திரைப்படம் அக்காகுருவி.  உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பே அக்காகுருவி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இதிலுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். 

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில்  இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காட்சிகளுக்குப் பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் இதில்  11 பாடல்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  அக்காகுருவி திரைப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.