×

ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைய இத்தனை கோடி சம்பளமா? அநியாயம் பண்ணும் நயன்!

மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களைத் தேர்வு செய்யும் பார்முலாவுக்கு திரும்பியுள்ளாராம். எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல முன்னனி இயக்குநர்களுடன் நடிகர்களுடன் வலம்வரும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஓகே சொல்லி கோலிவுட்டை
 

மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களைத் தேர்வு செய்யும் பார்முலாவுக்கு திரும்பியுள்ளாராம். 

எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி  அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்துள்ள   திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  இப்படத்தில் நடிகை நயன்தாரா  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

பல முன்னனி இயக்குநர்களுடன் நடிகர்களுடன் வலம்வரும் இந்த லேடி சூப்பர்  ஸ்டார் ஆர்.ஜே. பாலாஜிக்கு  ஓகே சொல்லி கோலிவுட்டை மிரளவைத்துள்ளார். காரணம்  மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களைத் தேர்வு செய்யும் பார்முலாவுக்கு திரும்பியுள்ளாராம். 

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. வழக்கமாக ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜியின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அகலக்கால் வைத்திருப்பதால் 3 கோடியை  சர்ரென்று ஏற்றியுள்ளாராம்.  ஒருவழியாக  ஆர்ஜே பாலாஜியும் படப்பிடிப்பு  தொடங்கும் வேலையை  செய்து வருகிறார்.

முன்னதாக காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா பறந்துள்ள நயன், நாளை தனது  35வது பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடவுள்ளது  குறிப்பிடத்தக்கது.