ஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி!
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த இரண்டு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிஸிக்கல் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை காலால் கட்டையை நிறுத்த வைக்கும் அதில் சேரன், தர்ஷன், சாண்டி, ஷெரின் உள்ளிட்டவர்கள் அவுட் ஆக, கவின் , லாஸ்லியா, முகின் ஆகியோர் ஸ்ட்ராங்காக நின்று டாக்ஸை செய்கின்றனர். இந்த மூவரில் யார் ஜெயிப்பார்கள் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.