×

ஆதித்யா வர்மா அப்டேட்: போர்ச்சுகல் செல்லும் படக்குழு!

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தை தயாரித்த இ4
 

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகவும் மேலும் புதிய படக்குழுவுடன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுருந்தது.

அதை தொடர்ந்து படத்தை ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்கிவருகிறார். இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதித்யா வர்மா படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில்  ஒரு பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக இம்மாத தொடக்கத்தில், அப்படக்குழுவினர் போர்ச்சுகல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஹீரோயினாக நடிக்க ஒரு நாள் இரவு அவருடன் படுக்கையை பகிர வேண்டும் எனக்கேட்டார்! பிரபல நடிகை புகார்!?