×

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இணைந்த கவுதம் மேனன்!

இயக்குநர் கவுதம் மேனன் ஆதித்ய வர்மா படத்தில் துருவ்-வின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் ஆதித்ய வர்மா படத்தில் துருவ்-வின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தைத்
 

இயக்குநர் கவுதம் மேனன் ஆதித்ய வர்மா படத்தில் துருவ்-வின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் ஆதித்ய வர்மா படத்தில் துருவ்-வின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தைத் தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகவும் மேலும் புதிய படக்குழுவுடன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வர்மா என்ற டைட்டில் கொண்ட இப்படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என பெயர் மாற்றியமைத்தனர். அதையடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்குகிறார். இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் துருவ்-வின் தந்தையாக யார் நடிப்பதென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதில் ஒரு வழியாக இப்படத்தை இயக்க மறுத்த இயக்குநர் கவுதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விக்ரம் -கவுதம் மேனன் இடையே நல்ல நட்பு உள்ளதால் கவுதம் மேனன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.