×

ஆட்டோ டிரைவராக நடிக்கும் ‘மக்கள் செல்வன்’!

சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. சென்னை: சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனுராமசாமி. அதைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதுடன்
 

சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

சென்னை: சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனுராமசாமி. அதைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் வென்றது.

இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி-சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் சேதுபதிக்கு ஜோடியாக அவரது ஆஸ்தான ஹீரோயின் காயத்ரி நடித்து வருகிறார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்திஜ்ன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.