×

ஆடையால் மீண்டும் எழுந்த சர்ச்சை: “இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” ரஹ்மானின் மகள் காட்டம்!

ரஹ்மானின் மகள் நிகழ்ச்சி முழுவதும் முகத்தை மூடிக்கொண்டவாறு புர்கா அணிந்திருந்தார். ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியதைக் கொண்டாடுவதற்கான விழா கடந்த ஆண்டு பிப்ரவரி 5 அன்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். ரஹ்மானின் மகள் நிகழ்ச்சி முழுவதும் முகத்தை மூடிக்கொண்டவாறு புர்கா அணிந்திருந்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ரஹ்மான் தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொல்வதாக
 

ரஹ்மானின் மகள் நிகழ்ச்சி முழுவதும் முகத்தை  மூடிக்கொண்டவாறு  புர்கா அணிந்திருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியதைக் கொண்டாடுவதற்கான விழா கடந்த ஆண்டு  பிப்ரவரி 5 அன்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். ரஹ்மானின் மகள் நிகழ்ச்சி முழுவதும் முகத்தை  மூடிக்கொண்டவாறு  புர்கா அணிந்திருந்தார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ரஹ்மான் தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொல்வதாக பலரும் கூறியிருந்தனர். ரஹ்மான் வீட்டிற்குள் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரி நடந்து கொள்வதாகவும் பலரும் குற்றம்சாட்டினர். 

இதையடுத்து ரஹ்மானின் மகள் கதீஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ‘தான் ஆடை அணிவதற்கு தன்னுடைய பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அனைத்தும் தன்னுடைய விருப்பம் சார்ந்ததே. நான் உடுத்தும் உடையோ அல்லது என் வாழ்க்கையில் நான் தேர்வு செய்யும் எந்த ஒன்றிற்கும் எனது பெற்றோர்களுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் முழுமையாக ஏற்று, சொந்த விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் எது வேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் பக்குவமடைந்து விட்டேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எந்த உடையை அணிய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைத்தான் நானும் அனுபவித்து வருகிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்ற நிலை தெரியாமல், யாரையும் எடை போடாதீர்கள்’ என்று விளக்கமளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் ஓராண்டைக் கடந்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எழுத்தாளர்  தஸ்லீமா நஸ்ரின் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘ரஹ்மானின் இசையை நான் விரும்புகிறேன். ஆனால்  அவரது மகளை பார்க்கும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பது வருத்தம் அளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ள ரஹ்மானின் மகள் கதீஜா, ‘ஒரு வருடத்திற்குப் பின்பு மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது.

அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் அணியும் துண்டு உடையின் மீது ஏன் கவனம் செலுத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது.

 நான் என் வாழ்க்கையில்  எடுத்த முடிவுக்கு வருத்தப்படவோ, பலவீனமாகவோ மாட்டேன்’ என்று கூறியுள்ள அவர் தனது நீண்ட பதிவில், ‘அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என் உடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால்  எனது ஆடையால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இல்லை. மாறாக நான் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்’ என்று விளக்கமளித்துள்ளார்.