×

ஆடம்பரமாக நடந்த பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம்!

ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. ஜோத்பூர்: ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கதோலிக்க கிறிஸ்துவ
 

ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது.

ஜோத்பூர்: ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை கரம் பிடித்தார்.

ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கதோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமணத்தை தொடர்ந்து புதுமண தம்பதிகள் டெல்லி திரும்பினர். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.