×

ஆசிட் வீச்சு பெண்ணாக மாறிய தீபிகா படுகோன்: முதல் நாள் படப்பிடிப்பில் கலங்கியது ஏன்?

நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சப்பாக் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சப்பாக் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால் அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால் கோபமடைந்த நஹிம் கான், லட்சுமி அகர்வால் மீது ஆசிட் தாக்குதல்
 

நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும்  சப்பாக்  படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும்  சப்பாக்  படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை  நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால்  அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால்  கோபமடைந்த  நஹிம் கான்,  லட்சுமி அகர்வால் மீது ஆசிட் தாக்குதல்  நடத்தியதில் அப்பெண் நிலைகுலைந்து போனாள். அவளின் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன.

இருப்பினும் இந்த கொடூரமான சம்பவத்துக்கு பிறகும் மனம் தளராமல், தன்னை போல  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத்  தன்னார்வ தொண்டு நிறுவனத்தை லட்சுமி அகர்வால் ஏற்படுத்தினார். இவரின் தைரியத்தையும்  மன  வலிமையையும் பாராட்டி, கடந்த  2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி கௌரவப்படுத்தினார். பின்பு திருமணமே வேண்டாம் என்று நினைத்திருந்த லட்சுமியை சமூக ஆர்வலர் அலோக் தீக்‌ஷித் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் புகு என்ற பெண் குழந்தை உள்ளது.

இதையடுத்து போராளி லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.  மேக்னா குல்சார் இயக்கும் இந்த படத்திற்கு  சப்பாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ளது.   இதில் லட்சுமி அகர்வாலாக  தீபிகா படுகோன் நடிக்கிறார்.இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு டெல்லியில் கடந்த மாதம்  தொடங்கிய அன்றே படத்தின்   பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை பெற்றது. 

இந்நிலையில் சப்பாக்  படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படம் குறித்து கூறிய படக்குழுவினர், ‘ தீபிகா முதல் நாள்  படப்பிடிப்பில் , இந்த உண்மை சம்பவம் குறித்து தயாரிப்பாளருடன் உரையாடும் போது உணர்ச்சி வசப்பட்டு உடைந்து போனார்.  இதையடுத்து சிறிது நேர அமைதிக்கு பிறகு மீண்டும்  அவர் இயல்பு நிலைக்கு திரும்பி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமி அகர்வால், ‘நான் பள்ளியில் ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. என்னைப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாறு பற்றி யார் யோசித்திருப்பார்கள்? என் வாழ்க்கையை ஒரு படமாக மாற்றுவதற்கு போதுமான தகுதியுடையவளாக என்னை நினைத்த இயக்குநர் மேக்னா குல்சாருக்கு நன்றி. பிரபல நடிகை தீபிகா நானாக நடிப்பதில் பெருமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இப்படம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.