×

ஆசிட் வீச்சு பெண்ணாக மாறிய தீபிகா படுகோனின் சபாக் படத்துக்கு தடை கோரி வழக்கு!

ப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால் அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால் கோபமடைந்த நஹிம் கான், லட்சுமி அகர்வால் மீது ஆசிட் தாக்குதல் நடத்தியதில் அப்பெண் நிலைகுலைந்து போனாள். அவளின் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன. இருப்பினும் இந்த
 

ப்படத்தின்   டீசர், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை  நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால்  அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால்  கோபமடைந்த  நஹிம் கான்,  லட்சுமி அகர்வால் மீது ஆசிட் தாக்குதல்  நடத்தியதில் அப்பெண் நிலைகுலைந்து போனாள். அவளின் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன. இருப்பினும் இந்த கொடூரமான சம்பவத்துக்கு பிறகும் மனம் தளராமல், தன்னை போல  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத்  தன்னார்வ தொண்டு நிறுவனத்தை லட்சுமி அகர்வால் ஏற்படுத்தினார்.  

இதையடுத்து போராளி லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு சப்பாக் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தில்  லட்சுமி அகர்வாலாக  தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். இப்படத்தின்   டீசர், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் சப்பாக் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பல ஆண்டுகளாக வாதாடிய வழக்கறிஞர் அபர்ணா பட் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.  இதுகுறித்து அவரது மனுவில், சபாக் படத்தில் தனக்கு எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. இதனால் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.