×

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறிய தீபிகா: குவியும் பாராட்டு!

நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சப்பாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சப்பாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆசிட் தாக்குதல் கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால் அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால் கோபமடைந்த நஹிம்
 

நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும்  சப்பாக்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி: நடிகை தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும்  சப்பாக்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆசிட் தாக்குதல்  

கடந்த 2005 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலை  நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான். ஆனால்  அப்பெண்ணோ காதலை ஏற்க மறுத்து விட்டாள். இதனால்  கோபமடைந்த  நஹிம் கான்,  லட்சுமி அகர்வால் மீது ஆசிட் தாக்குதல்  நடத்தியதில் அப்பெண் நிலைகுலைந்து போனாள். அவளின் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன. 10 வார சிகிச்சைக்குப் பிறகு, சிதைந்த முகத்துடன் வீடு திரும்பினாள் லஷ்மி.

கடைகளில் ஆசிட் விற்கக் கூடாது

இந்த கொடூரமான சம்பவத்துக்கு பிறகும் மனம் தளராமல், தன்னை போல  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத்  தன்னார்வ தொண்டு நிறுவனத்தை லட்சுமி அகர்வால் ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர்களின் சிகிச்சைக்கும் உதவி வருகிறார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும், ஆசிட் விற்பனையைத் தடைசெய்யவும், குற்றவாளிக்குக் கடும் தண்டனைகள் வழங்கவும் புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும்’ என Stop Acid Attacks அமைப்பினர் இணையத்தின் மூலம் 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கினர். அதன்படி, கடைகளில் ஆசிட் விற்கக் கூடாது.அதுவும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

தைரியமான பெண் விருது 

இவரின் தைரியத்தையும்  மன  வலிமையையும் பாராட்டி, கடந்த  2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி கௌரவப்படுத்தினார். பின்பு திருமணமே வேண்டாம் என்று நினைத்திருந்த லட்சுமியை சமூக ஆர்வலர் அலோக் தீக்‌ஷித் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புகு என்ற பெண் குழந்தை உள்ளது.

லட்சுமியாக நடிக்கும்  தீபிகா

இந்நிலையில் போராளி லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு  சப்பாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள மேக்னா குல்சார் இயக்குகிறார்.  இதில் லட்சுமி அகர்வாலாக  தீபிகா படுகோன் நடிக்கிறார்.இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு டெல்லியில் இன்று தொடங்கியுள்ள நிலையில் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் லட்சுமியாக நடிக்கும்  தீபிகா, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படம் அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தன்னை விட சிறு வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் டிடி: யாரு தெரியுமா அந்த ஹீரோ?