×

அறந்தாங்கி நிஷாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட மணிமேகலை! வைரல் வீடியோ!

அறந்தாங்கி நிஷா அவமானத்திற்குப் பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சென்னை: அறந்தாங்கி நிஷா அவமானத்திற்குப் பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சின்னதிரையில் கலக்கப்போவது யாரு ஷோ மூலமாகப் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இதில் அவர் பழனியுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை கூட்டத்திற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில் ஒளிபரப்பான Mr &Mrs சின்னதிரை என்ற நிகழ்ச்சியில் கணவருடன் கலந்து கொண்டார். அதில் சக போட்டியாளராகத், தொகுப்பாளர்
 

அறந்தாங்கி நிஷா அவமானத்திற்குப் பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை  மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

சென்னை: அறந்தாங்கி நிஷா அவமானத்திற்குப் பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை  மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

சின்னதிரையில் கலக்கப்போவது யாரு ஷோ மூலமாகப் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இதில் அவர் பழனியுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை கூட்டத்திற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில் ஒளிபரப்பான Mr &Mrs சின்னதிரை என்ற நிகழ்ச்சியில் கணவருடன் கலந்து கொண்டார். அதில் சக போட்டியாளராகத், தொகுப்பாளர் மணிமேகலையும் கலந்து கொண்டார். அந்த ஷோ மூலம் இவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர்.  

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கடற்கரையில் நடனமாடியுள்ளனர். அப்போது நிஷா பின்னால் இருக்கும் கட்டையின் மீது ஆர்வக்கோளாறு தனமாக ஏறினார். அப்போது எதிர்பாரா விதமாக பொத்தென்று கீழே விழ ,யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நிஷா அந்த விடியோவை பத்திரமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில் மணிமேகலை அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘அவமானத்திற்குப் பாய்ந்து நிஷா அக்கா ரொம்ப நாட்களாக மறைத்து வெய்துதுதிருந்த வீடியோ’ என்று பதிவிட்டுள்ளார்.  

இதை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் மணிமேகலை இப்படி நிஷா மானத்தை வாங்கிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.