×

அருண் விஜய் – விஜய் ஆண்டனி கூட்டணியில் இணைந்த கமல் மகள்!

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள் இயக்குநர் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார். ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள்

இயக்குநர்  நவீன் இயக்கும்  அக்னி சிறகுகள் படத்தில் நடிகை அக்ஷரா  ஹாசன் இணைந்துள்ளார். 

‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.  கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் ஐரோப்பாவில் தொடங்குகிறது. 

இந்நிலையில்  இப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்திருந்த கடாரம் கொண்டான் அக்ஷராவின் நடிப்பு வரவேற்பு பெற்ற  நிலையில் தற்கு அவர் அக்னி சிறகுகள் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.  இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் ஐரோப்பா, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில்  தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.