×

அரசு பள்ளிகளை புதுப்பித்த ராகவா லாரன்ஸ்!

நலிவடைந்த 2 அரசு பள்ளிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தத்தெடுத்து, அதனை சீரமைத்துள்ளார். சென்னை: நலிவடைந்த 2 அரசு பள்ளிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தத்தெடுத்து, அதனை சீரமைத்துள்ளார். சினிமா மட்டுமின்றி சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், பாடி மற்றும் செஞ்சி அருகே உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அதனை புதுப்பித்துள்ளார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி கற்க அடைக்கமலாவது அரசு பள்ளிகளில் தான். அரசுடன் இணைந்து மக்களும்
 

நலிவடைந்த 2 அரசு பள்ளிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தத்தெடுத்து, அதனை சீரமைத்துள்ளார்.

சென்னை: நலிவடைந்த 2 அரசு பள்ளிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தத்தெடுத்து, அதனை சீரமைத்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், பாடி மற்றும் செஞ்சி அருகே உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அதனை புதுப்பித்துள்ளார். 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி கற்க அடைக்கமலாவது அரசு பள்ளிகளில் தான். அரசுடன் இணைந்து மக்களும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முன்வர வேண்டும். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், நலிவடைந்துள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது குறித்து அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பள்ளியின் சிதிலமடைந்த கட்டிடத்தை சீரமைத்து தனியார் பள்ளியின் தரத்திற்கு மாற்றியுள்ளார். செஞ்சி அருகே மேல்மலையனூரில் உள்ள அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் மாதிரி மாற்றியுள்ளார்.

மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளிகளை இன்று திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் அவரால் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இவ்விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்ததுடன், நடிகை ஓவியாவை தன் சார்பில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வைத்துள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது, ’இரண்டு பள்ளிகளோடு நின்று விடப் போவதில்லைஎன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்என்னால் தான் படிக்க முடிய வில்லைபடிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.