×

அரசு பள்ளி மாணவர்கள் 100 பேருடன் வானில் பறக்கவுள்ள நடிகர் சூர்யா

சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய
 

சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின்  போஸ்டர்கள் மற்றும்  டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. இதையடுத்து இப்படத்தின்  மாறா என்ற தீம் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை விமான நிலையத்தில்  நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடலை நடுவானில் பறக்கும் விமானத்தில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தது. 

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்  அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேர் முதல் முறையாக  நாளை (பிப்ரவரி 14)விமானத்தில் பயணம் செய்யவிருக்கின்றனர் என்றும் நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது வெய்யோன் சில்லி பாடல் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் நடக்கும் கட்டுரை போட்டிகளின் மூலம் தேர்வாகி இந்த பயணத்தில் இடம்பெறப்போகிறார்கள் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.