×

அம்பானி வீட்டு ஆடம்பர திருமணம்: உணவு பரிமாறி அசத்திய அமிதாப், அமீர்!

அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் உணவு பரிமாறும் வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை: அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் உணவு பரிமாறும் வீடியோ வைரலாகி வருகிறது. உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி-ஆனந்த் பிராமல் திருமணம் உலகமே வியக்கும் அளவிற்கு கோலாகலாமாக மும்பையில் நடைபெற்றது. மும்பையில் உள்ள அன்டிலா பங்களாவில்
 

அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் உணவு பரிமாறும் வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பை: அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் உணவு பரிமாறும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி-ஆனந்த் பிராமல் திருமணம் உலகமே வியக்கும் அளவிற்கு கோலாகலாமாக மும்பையில் நடைபெற்றது. மும்பையில் உள்ள அன்டிலா பங்களாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் நடைபெற்ற இஷா அம்பானியின் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் உணவு பரிமாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் மற்றும் அமீர்கான் ஆகியோர் தங்கள் வீட்டு விழாவாக அம்பானி வீட்டு திருமணத்தில் அன்பின் காரணமாக பரிமாறியதாகவும், உலகமே மெச்சும் அளவிற்கு பிரபலமாக இருந்தாலும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் இதெல்லாம் செய்து தான் ஆக வேண்டும் எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.