×

அம்பானி குடும்பத்தின் ஆடம்பர திருமணம்: களைக்கட்டிய உதய்ப்பூர்!

இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண கொண்டாட்டம் உதய்ப்பூரில் தொடங்கியது. உதய்ப்பூர்: இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண கொண்டாட்டம் உதய்ப்பூரில் தொடங்கியது. ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் ஏரிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடமான உதய்ப்பூர் நகரில்
 

இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண கொண்டாட்டம் உதய்ப்பூரில் தொடங்கியது.

உதய்ப்பூர்: இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண கொண்டாட்டம் உதய்ப்பூரில் தொடங்கியது.

ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் ஏரிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடமான உதய்ப்பூர் நகரில் இஷா அம்பானியின் திருமணம் கோலாகலமாக நடைபெறுவதையொட்டி, உதய்ப்பூர் நகரமே ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும்-ஆனந்த் பிராமலுக்கும் வரும் டிச12ம் தேதி மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக டிச.8,9 ஆகிய 2 நாட்கள் உதய்ப்பூரில் திருமணச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உதய்ப்பூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உதய்ப்பூரில் நடைபெறும் திருமண சடங்குகள் நிகழ்ச்சிக்கு அம்பானி குடும்பத்தினர், நண்பர்கள் என ஏராளமானோர் உதய்ப்பூருக்கு தனி விமானங்களில் பறக்கவுள்ளனர். இதற்காக சுமார் 30 முதல் 50 தனியார் விமானங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உதய்ப்பூர் விமான நிலையத்தில் பொதுவாகவே குறைந்த அளவில் விமான போக்குவரத்து இருப்பதால், அடுத்த 5 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான விமான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வரவுள்ளதால் உதய்ப்பூரில் உள்ள அரண்மனை போன்ற பெரிய ஹோட்டல்கள் முழுவதும்ம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பானி குடும்பத்தின் திருமணத்திர்கு வரும் விருந்தினர்களுக்கு எவ்வித குறையும் இருக்கக் கூடாது என்பதால் விருந்தினர்களை உபசரிக்க தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விருந்தினர்களின் போக்குவரத்து வசதிக்காக ஆடி, பி.எம்.டபுள்.யூ, ஜாகுவார், பென்ஸ் போன்ற 1000-க்கும் அதிகமான ராயல் கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் கோடீஸ்வர திருமணத்திற்கு அமெரிக்க அரசிய தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். இஷாவின் திருமணத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.