×

அமலா பால் படத்திற்கு ‘A’ சான்றிதழ்: படக்குழுவினர் அதிர்ச்சி!?

நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை படத்திற்குத் தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்னை: நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை படத்திற்குத் தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலா பால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த
 

நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை படத்திற்குத் தணிக்கை  குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 

சென்னை:  நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை படத்திற்குத் தணிக்கை  குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலா பால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ’ராட்சசன்’ படத்தை அடுத்து மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள  ‘ஆடை’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதை ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் அனைத்து  பணிகளும் முடிந்து தற்போது படத்தைத் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். 

 வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர்  மற்றும் டீசரானது  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.